உலக தரப்படுத்தலில் தென்கிழக்கு (SEUSL) பல்கலைக்கழகம்! இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!

உலக தரப்படுத்தலில் தென்கிழக்கு (SEUSL) பல்கலைக்கழகம்! இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!


பல்கலைக்கழகங்களின் UI கிரீன் மெட்ரிக் 2020 க்கான தரவரிசையில், உலகில் அளவில் பங்குபற்றிய 992 பல்கலைக்கழகங்களில் சகல மட்டத்திலான புள்ளிகளையும் உள்ளடக்கியதாக உலக அளவில் 331ஆவது இடத்தினை இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று வெள்ளி தர வரிசையை அடைந்துள்ளது.


இலங்கை பல்கலைக்கழகங்கள் மொத்தம் ஆறு இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன, அவற்றுள் ஒட்டுமொத்தமாக 5,975 மதிப்பெண்களுடன் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 


$ads={2}


அத்துடன் வெள்ளி தரவரிசையினையும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 


களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ருகுனு பல்கலைக்கழகம் என்பன அடுத்த இடங்களை முறையே இத்தரப்பட்டியலில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post