கண்டி, மஹய்யாவ பிரதேசம் முடக்கப்பட்டது - கண்டி மாநகர ஆணையாளர்

கண்டி, மஹய்யாவ பிரதேசம் முடக்கப்பட்டது - கண்டி மாநகர ஆணையாளர்

கண்டி மாவட்டத்தின் மஹய்யாவை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்தார்.

28 கொரோனா தோற்றாளர்கள் குறித்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

´மஹய்யாவை என்பது எமது நகருக்கு சேவை வழங்கும் பெரும்பாலான மக்கள் வாழும் பிரதேசமாகும். அதேபோன்று இதற்கு முன்னர் போகம்பரை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி மாநகர சபை எல்லைக்குள் பொதுமக்களுக்கும் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பு தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post