
முல்லேரியா வைத்தியசாலையிலேயே இந்த பிரதான PCR பரிசோதனை இயந்திரம் உள்ளது.
அண்மையில் இந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொரோனா பரிசோதனையும் ஸ்தம்பித்தமடைந்திருந்து.
சீனாவில் இருந்து தொழிநுட்பக்குழு ஒன்று வந்து திருத்தம் செய்தது. இதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயனங்கள் கொள்வனவு செய்யப்படாத காரணத்தினால் மீண்டும் செயலிழக்கும் கட்டத்தில் இருப்பதாக நேற்று நடந்த கொரொனா ஒழிப்பு பற்றிய தொழில்நுட்ப குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.