
இந்நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் ருவன்வெல்ல - மாபிடிகம பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (17) கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை – ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்துக்கொண்டுள்ளார்.
இந்த விமானம் திருகோணமலை – சீனகுடா விமானப்படை தளத்திலிருந்து சுமார் ஒரு மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து விசாரிக்க ஏர் கமடோர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இரண்டு விமானப்படை விமான பொறியாளர்கள் உள்ளனர் என்று விமானப்படை ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


