
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளோ அல்லது பேயோ இருந்திருந்தால் கொரொனாவினால் மனித குலம் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவிலிருந்து அவர்களினால் எம்மை மீட்டிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் கடுந்தொனியில் பேசும் காணொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காளி அம்மா, கதிர்காமக்கடவுள், விஷ்னு, பத்தினி அம்மா உள்ளிட்ட கடவுளர் இருந்திருந்தால் கொரோனாவினால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு புத்திஜீவியும் காளி அம்மாவின் மருந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மருத்துவம் குறித்த மிகுந்த நம்பிக்கை உண்டு என்ற போதிலும் இந்த மாதிரி காளி அம்மா போன்ற பிரச்சாரங்களினால் இந்த பானி மருந்து குறித்த நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.