
நாட்டின் வட கிழக்கு பிராந்தியத்தில் சீரற்ற வானிலை நிலைமை காணப்படுவதன் காரணமாக இவ்வாறு கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைப் பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில இடங்களில் இன்று (18) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.