
எனினும் இந்த தருணத்தில் ஊரடங்கையோ அல்லது தனிமைப்படுத்தலையோ முன்னெடுக்கும் எண்ணமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளார்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி,
தற்போதைய கொரோனா நிலையை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். தேவைப்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் அல்லது ஊரடங்கு குறித்த பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் குறிப்பாக பண்டிகை காலத்தில் நாங்கள் ஊரடங்கினை அல்லது தனிமைப்படுத்தலை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.