ரிட்டிகல தேவிந்த தயாரித்ததாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்து இன்று (23) தேசிய தொலைக்காட்சியான ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.
$ads={2}
குறிப்பிட்ட இந்த பாணியின் பின்னால் இருக்கும் மனிதர் தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவராவார். அவர் ‘ரித்திகல ராவண பரபுர’ பரம்பரையில் இருந்து வந்தவர் என்றும், பண்டைய வேதங்களில் காணப்படும் வேத குறிப்புகளின் அடிப்படையில் இந்த கலவையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.
இந்த பாணியினை முதலில் ITN விளம்பரப்படுத்தியது மட்டுமன்றி, இன்று ஒரு சடங்கு முறையில் இது ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.