பசிலுக்கு ஆசனத்தை அர்ப்பணிக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்!

பசிலுக்கு ஆசனத்தை அர்ப்பணிக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்!


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட விட்டுக்கொடுக்க தாம் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்தார்.


கண்டியில் வைத்து இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


$ads={2}


மிகவும் குறுகிய காலத்திலேயே கட்சி ஒன்றை ஆரம்பித்து நாட்டின் ஜனாதிபதியை நிர்ணயிக்கும் சக்தியாக அக்கட்சியை ஸ்தாபித்த பசில் ராஜபக்ஷ இந்த நாட்டையும் வெற்றிபெற வலிமை கொண்டிருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறான ஒருவர் நாடாளுமன்றம் வர தனது ஆசனத்தைக் கூட அர்ப்பணிப்பு செய்ய தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post