விமான நிலையத்தில் DUTY FREE யினில் கொள்வனவு செய்ய மீண்டும் சந்தர்ப்பம்!

விமான நிலையத்தில் DUTY FREE யினில் கொள்வனவு செய்ய மீண்டும் சந்தர்ப்பம்!


தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் காரணமாக விமான நிலையத்தில் தீர்வையற்ற (DUTY FREE) பொருள் கொள்வனவு சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று நிலைமை காரணமாக கட்டாய தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் விமான நிலையத்தின் DUTY FREE வர்த்தக தொகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் போன விமான பயணிகளுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நாள் முதல் ஒரு மாத காலத்திற்குள் விமான நிலையத்திற்கு வருகைதந்து அங்குள்ள DUTY FREE நிலையங்களில் பொருட்களை வாங்கிச் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று (05) காலை 9 மணிமுதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு விமான பயணிக்கு வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கிற்கு ஒருவரை மாத்திரமே அழைத்துச் செல்ல முடியுமென்பதுடன் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post