
சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு நகரில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பண்டிகைக் காலங்களில் அபாயம் நிறைந்த பகுதிகளுக்கு பயணிப்பதை இயன்றளவு தவிர்த்து செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குறைந்தளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டங்களுக்கு பிரவேசித்தமை காரணமாகவே நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பண்டிகைக் காலங்களில் வேறு மாகாணங்களுக்கு பயணிக்கும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.