
வாட்ஸாப்பின் டெஸ்க்டோப் பதிப்பான வாட்ஸாப் வெப் தளத்தில் புதிதாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு அம்சம் தற்பொழுது பீட்டா வெர்ஷனில் சோதனைக்காகக் களமிறக்கப்பட்டுள்ளது என்பதை WABetaInfo அறிவித்துள்ளது.
இந்த அம்சம் எப்படிச் செயல்படும்? எப்படி இதை நீங்கள் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
இந்த அம்சம் முதன்முதலில் வாட்ஸாப்பின் புகழ்பெற்ற டிராக்கரான WABetaInfo ஆல் கடந்த அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்பொழுது, WABetaInfo இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வெப் வெர்ஷன் மற்றும் டெஸ்க்டோப் பயன்பாடு ஆகிய இரண்டும் இந்த புதிய அம்சத்தைப் பெறுகின்றது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷன் கிடைக்கிறது.
WABetaInfo இன் தகவல் படி, டெஸ்க்டோப் பயன்பாடு பீட்டா சோதனைக்கு அதிக முன்னுரிமையைக் கொண்டுள்ளது, எனவே உங்களுக்காக வெப் வெர்ஷனில் இந்த புதிய அப்டேட் கிடைக்கவில்லை எனில், பயன்பாட்டிற்குள்ளேயே அதைச் சோதித்து பாருங்கள். இந்த அம்சம் உங்களுக்குக் கிடைத்திருந்தால், உங்கள் டிஸ்பிளேவில் சாட் பாக்ஸை ஓபன் செய்ததும் ஆடியோ அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு பட்டன் ஆகியவை பீட்டா குறியீட்டுடன் காண்பிக்கப்படும்.

இந்த அம்சம் தற்போது தனிப்பட்ட சாட் பயன்முறைக்கு மட்டுமே கிடைக்கிறது, குரூப் சாட் பயன்முறைக்கு இவை இன்னும் கிடைக்கவில்லை என்பதை மறக்கவேண்டாம்.
ஆடியோ அழைப்பை மேற்கொள்ளவும், அட்டன் செய்வதற்கும் வலதுபுறத்தில் பெரிய பாப்-அப் ஸ்கிரீன் தோன்றுகிறது. இதில் கால் அட்டன் மற்றும் கால் கட் செய்வதற்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று புள்ளி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அழைப்பில் இருக்கும்போது எந்த மைக்ரோஃபோன், கேமரா அல்லது ஆடியோ சாதனத்தைப் பயன்படுத்தும் விற்பதையும் பெறுவீர்கள். இந்த அம்சம் இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.