இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்! -ரத்னஜீவன் ஹூல்

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்! -ரத்னஜீவன் ஹூல்


இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.


இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு சாட்சியங்கள் இருப்பதாகவும் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


தமிழ் மக்கள் தமது இறந்த உறவினர்களை நினைவுக் கூர தற்போதைய அரசாங்கம் இடமளிப்பதில்லை எனவும் ஜெனிவா யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


மேலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற நிலையில் செயற்பட்டு வருவதாகவும் ஹூல் குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post