கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது கொரோனா மரணம் பதிவானது!

கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது கொரோனா மரணம் பதிவானது!


கொரோனாவின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு உயிரிழப்பு இன்று (21) பதிவாகியுள்ளது என சுகாதார பணிப்பாளர் திரு அழகையா லதாகரன் தெரிவித்தார்.


இதற்கமைய, கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று பேர் இதுவரை கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.


சாய்ந்தமருது, வெலிவேரியன் பிரதேசத்தினைச் சேர்ந்த 58 வயது நபரே இன்று உயிரிழந்துள்ளார்.


$ads={2}


குறித்த நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.


-பாருக் ஷிஹான்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post