
கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்களுக்கு மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே நோய்களால் தாக்கப்படுவதாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா பாதித்த தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம், கொரோனா வைரஸுக்கு எதிரான ஆண்டிபாடிக்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
சிங்கப்பூரில் 16 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த சிறிய ஆய்வில், கொரோனா தொற்று தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் குறித்து இன்னும் முழுமையான புரிதல் ஏற்படவில்லை. எனவே, இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
$ads={2}
இந்நிலையில், தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுவதில்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சுவாசத் தொற்றுகள், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும் என உலக சுகாதார மையம் கூறுகிறது.
எனினும், கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று பரவுமா என்பது தெளிவாகவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவாது என இந்த ஆய்வு மூலம் உறுதியாகியுள்ளதாக சிங்கப்பூர் ஆய்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு இலேசான தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், வயது முதிர்ந்த மற்றும் எடை அதிகமுள்ள பெண்களுக்கு கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களும் குணமடைந்துவிட்டமை முக்கிய அம்சமாகும்.