புல்மோட்டை பகுதியில் அலி ஹோட்டல் அஸீஸ் நானா எனும் நபர் பலி! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

புல்மோட்டை பகுதியில் அலி ஹோட்டல் அஸீஸ் நானா எனும் நபர் பலி! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


திருகோணமலை புல்மோட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் அடையாளம் தொடர்பில் குச்சவெளி பிரதேச சபையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


குறித்த நபர் தற்சமயம் உயிரிழந்துள்ளதாகவும், தகவல் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


புல்மோட்டை அலி ஹோட்டலில் வேலை செய்து வந்த அஸீஸ் நானா என்று அழைக்கபப்டும் குறித்த நபர் இன்றைய தினம் காலமாகியுள்ளார்.


இவர் தொடர்பில் எதுவித தகவலும் இல்லையெனவும், இவருடைய சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க யாரும் உறவினர்கள் முன்வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இவரது சடலம் தற்சமயம் புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் தெரியாமல் உள்ளதால் தகவல்களை பெற உதவிகளை வழங்குமாறும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ. முபாரக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் A. முபாறக், தவிசாளர், குச்சவெளி பிரதேச சபை என்னும் முகவரிக்கோ அல்லது 0713283300 , 0703983300 என்னும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அறியத்தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post