கொரோனா நோயாளியின் கழிவு நீரில் கலந்தால் பாதிப்பாகுமா?

கொரோனா நோயாளியின் கழிவு நீரில் கலந்தால் பாதிப்பாகுமா?


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பாலமுனை வைத்தியசாலையைச் சூழ உள்ள ஐந்து பேரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்களின் கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும், குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


$ads={2}


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதின் ஊடாக, நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதனால் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதாரத் தரப்பு தெரிவித்துள்ளது.


இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றாளர்களின் கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட மாட்டாதா என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதேவேளை, குறித்த மனுமீதான விசாரணையை, எதிர்வரும் ஜனவரி மாதம் நான்காம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post