இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தீவிரவாத கொள்கைகள் பரப்புகிறது - கலகொட அத்தே ஞானசார தேரர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தீவிரவாத கொள்கைகள் பரப்புகிறது - கலகொட அத்தே ஞானசார தேரர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை குறித்து ஆராய விசாரணைக்குழுவொன்றை அமைக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஊடாக, தீவிரவாத கொள்கைகள் பரப்பப்படுவதாகவும் இது தொடர்பில் ஆராயுமாறு தாம் ஊடகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஞானார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை இன்றைய தினம் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் உருவாகியுள்ள தீவிரவாத குழுக்களின் நிலைப்பாட்டை எமது நாட்டில் வாழக் கூடிய சம்பிரதாய முஸ்லிம்களின் எண்ணங்களில் விதைப்பதற்காக பொது மக்களின் வரிப்பணத்துடன் நடத்தக் கூடிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையைப் பயன்படுத்துகின்றார்கள். 

இதன் ஊடாக வஹாபிச தலைவர் இன்று அதனை நடத்திச் செல்கின்றார்கள். நாம் இது தொடர்பில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடியிருந்தோம். அதன்பின்னர் இதனை நிறுத்துவதற்கு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்கு கட்டுப்பட்டுள்ள சில அதிகாரிகள் பணிப்பாளர் சபை அல்லது மேலும் சில தரப்பினர் குறித்த நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரகமாக தொடர்ந்தும் நடத்திக் கொண்டு செல்கின்றார்கள்.

இதன்படி இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கும் முஸ்லிம் சேவையின் மத ரீதியான நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் புதிய பணிப்பாளர் சபையொன்றை அமைக்குமாறு நாம் ஊடகத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post