கத்தார் நாட்டை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி!

கத்தார் நாட்டை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி!


கொரோனா தடுப்பூசி நாளை கத்தாரை வந்தடையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரின் பிரதமர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் இதனைத் தெரிவித்துள்ளதாக கத்தார் உள்ளூர் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அவர்களின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பூசியின் முதல் ஏற்றுமதி நாளை கத்தார் வந்தடையும் என்றும், சுகாதார நெறிமுறைகளின்படி தடுப்பூசி அனைவருக்கும் வழங்குமாறு சுகாதாரத்துறைக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


$ads={2}


கத்தார் விளையாட்டு மற்றும் அவசர விவகாரங்களுக்கான பொது சுகாதார அமைச்சரின் ஆலோசகர் வைத்தியர் அப்துல் வஹாப் அல் முஸ்லிஹ் அவர்கள் முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதாக தெரிவித்துள்ளார். 


ஏனையவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் வழங்கப்படவுள்ளது. மேலும் கத்தாரிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியானது இலவசமாக வழங்கப்படும் என்பதாக அண்மையில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post