குவைத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை தற்காலிகமாக அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
$ads={2}
டிசெம்பர் 24 முதல் ஜனவரி 10 ஆம் திகதிவவரை குவைத்திலுள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும் என குவைத்தின் KUNA செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குவைத்தில் சுமார் 650,000 – 750,000 உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சில நூற்றுக்கணக்கானோர் குவைத்தை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து குவைத்துக்கு வந்தவர்கள் ஆவர்.
குவைத்தில் இதுவரைர 149,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 926 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி செலத்தும் நடவடிக்கை குவைத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


