நாட்டில் நிலவும் கொரொனா தொற்று நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான விசேட அறிவிப்பு பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ளது.


