உயர்நீதிமன்ற தீப்பரவலலுக்கு காரணம் யார்? எழுந்துள்ள சந்தேகம்!

உயர்நீதிமன்ற தீப்பரவலலுக்கு காரணம் யார்? எழுந்துள்ள சந்தேகம்!

உயர்நீதிமன்ற தீப்பரவல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ்ஸ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல முக்கிய வழக்குகளில் சிலர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பலரும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தீப்பரவல் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

$ads={2}

மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக செயற்ப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் ஊடாக பலரது எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவருமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ்ஸ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post