அப்துல்லாஹ் மஹ்ரூப் உட்பட இருவருக்கும் நாளைவரை விளக்கமறியல்!

அப்துல்லாஹ் மஹ்ரூப் உட்பட இருவருக்கும் நாளைவரை விளக்கமறியல்!

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உள்ளிட்ட இருவரும் நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கொழும்பு நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உள்ளிட்ட இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

$ads={2}

2015 – 2019 காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post