5 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் நோட்டுக்களுடன் இருவர் கைது!

5 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் நோட்டுக்களுடன் இருவர் கைது!

கொக்கரெல்ல – (G)கல்சேருகொல்ல பகுதியில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 5,000 ரூபா 100 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேக நபர்களின் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய மற்றும் தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post