
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை செய்யவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவு திருமணமும் நடைபெற்றது.
$ads={2}
செல்போன் ஆதார அடிப்படையிலேயே ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.