ஜனாஸா எரிப்பு நாடகத்தை அடுத்த ஆண்டுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம்! -அத்தரகம பஞ்சாலங்கார தேரர்

ஜனாஸா எரிப்பு நாடகத்தை அடுத்த ஆண்டுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம்! -அத்தரகம பஞ்சாலங்கார தேரர்

 

இலங்கையில் இடம்பெற்று வரும் ஜனாஸா நாடகத்தை அடுத்த ஆண்டுக்கும் கொண்டு செல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அத்தரகம பஞ்சாலங்கார தேரர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


$ads={2}


அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கட்டாய ஜனாஸா எரிப்பு, அரசியல் நாடகம் என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும் உலகமே அடக்கம் செய்ய அனுமதிக்கும் போது இலங்கையில் நடாத்தப்படும் இந்த அரசியல் நாடாகத்தின் பின் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், முஸ்லிம்கள் தாம் செறிந்து வாழும் பிரதேசங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.


அரசாங்கம் மாதக் கணக்கில் இழுத்துச் செல்லும் இந்நாடகம் அடுத்த வருடத்துக்கும் கொண்டு செல்லப்படக் கூடாது எனவும் இதனால் நாடு எந்த நன்மையையும் அடையப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


-ஏ.பி.எம்.அஸ்ஹர்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post