கொழும்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் வெளியானது!

கொழும்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் வெளியானது!


கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளன.


நாளை (28) அதிகாலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் நடைவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாளை அதிகாலை 5 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.


$ads={2}


இதன்படி, டேம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.


மேலும், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஹுணுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயூரா ஒழுங்கை, பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ள தோட்டம், வெல்லம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு லக்சந்த செவண வீடமைப்பு திட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post