
இதற்கமைய, கண்டி நகரில் அமைந்துள்ள 42 பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சநிலை காரணமாக கண்டி நகரில் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 07ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, கண்டி நகர பாடசாலைகளான திருத்துவக் கல்லூரி, தக்ஷிலா கல்லூரி மற்றும் கலைமகள் கல்லூரி தவிர்த்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.