
சர்வதேச வர்த்தக மாநாடு ஒன்றில் பேசிய அவர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் அரசின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
எனவே, புத்தாண்டில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என நம்புவதாகவும், நாட்டு மக்களில் 20 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன், அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களது தடுப்பூசி பரிசோதனையின் இறுதிக்கட்ட முடிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசின் தடுப்பூசிக் குழு கடந்த வாரம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.