பெண் சுதந்திரம் எனும் பெயரில் பெண்களை ஆண்-பெண் கலப்பின்பால் இட்டு செல்லும் முயற்சி! -எம்.ஐ.எப் ஹம்னா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண் சுதந்திரம் எனும் பெயரில் பெண்களை ஆண்-பெண் கலப்பின்பால் இட்டு செல்லும் முயற்சி! -எம்.ஐ.எப் ஹம்னா

ஒளி மயமான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு. 

பெண் என்பவள் சமூகத்தின் கண். ஒரு மனிதனுக்கு கண் எவ்வளவு அவசியமோ அதேபோன்று சமூக மேம்பாட்டுக்கும் சமூக உருவாக்கத்துக்கும் வளம்மிக்க ஒரு சமூகத்துக்கு பெண் அவசியப்படுகிறாள்.

யுக ஆரம்பத்தில் அல்லது அறியாமைக் காலத்தில் பெண்ணானவள் தன்னுடைய உயிருக்கும் சுதந்திரமற்ற வெறும் கெடுதி பயக்கும் ஒரு ஜீவனாக கருத்தப்பட்டு வந்தாள். அவள் அடிமையாகவும், சிலவேலை மிருகத்தனமாகவும் நடத்தப்பட்டாள்.

விரகு சுமப்பது, வீட்டு வேலை செய்வது, கணவன் மற்றும் பிள்ளைகளின் வேலைகளை செய்வது என கல்வியை மறந்து புறக்கணித்து வாழ்வதற்கு இவள் பழக்கப்பட்டாள். பேசும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, ஏன் வாழும் உரிமை கூட பறிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்திருந்தாள். 

இது இப்படி இருக்க, தற்காலத்தில் சில மேற்கத்திய வாதிகள் பெண்ணுரிமை என்ற பெயரில் ஒரு போராட்டத்தை உண்டு பண்ணினார்கள். அவள் தன்னுடைய உரிமைகளை அடைந்து கொள்ள முடியாமல் இருக்கிறாள், ஆண் அவளுக்கு எதையும் கொடுக்காமல் இருக்கிறான், அனைத்தையும் தனக்கு சொந்தமானதாக ஆக்கிக் கொள்கிறான் என்றும், பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவள் என்ன செய்வதென்றே அறியாத படு மோசமான, முறையற்ற ஆண்-பெண் கலப்பின்பால் அவளை இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர்.

இதனால் மேற்கத்திய நாடுகளில் அழகான வாலிபப் பெண்கள் சுகம் அனுபவிக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் இறுதியில் முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுபவர்களாகவும் ஆகி விடுகிறார்கள்.

எனவே ஒரு பொறுப்புள்ள பெண்ணானவள், இந்த உண்மை நிலைகளை அறிந்து, வலுப்பெற்று கண்ணியம், கல்வி, சிறப்பு, வெட்கம் போன்றவைகளை தன்னகத்தே கொண்ட தலைமுறையை உறுவாக்கி பராமரிக்கக் கூடிய பொறுப்பு மிக்க பெண்ணியத்தை தழைக்க வைக்க வேண்டும். மேலும் அவள் தன்னுடைய சமுதாயத்துக்கு சேவை செய்யக்கூடிய மேதைகளையும், உண்மையான தியாயிகளையும் சமூகத்துக்கு கொடையளிக்க வேண்டும். 

$ads={2}

சமுதாயத்தில் பெண்கள் அரைவாசியாக எண்ணிக்கையில் கணிக்கப்படுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆகவே கணக்கெடுப்பில் சரி பாதியாக பெண்களை நாம் கணக்கிட்டால்  அவளுடைய பாரிய முக்கியத்துவத்தையும்,  வளமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அவலுடைய மகத்தான பங்களிப்பையும்  நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆகவே ஒவ்வொரு பெண்ணும் இந்த பொறுப்பு மிக்க பணியை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றும் போது நிச்சயமாக ஒரு வலுமிக்க, ஒளிமயமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நாம் மீண்டும் ஒருமுறை வரலாற்றை பிரட்டிப்பார்க்கும் போது தெரியும் எத்துணை நம் வீரப் பெண்மணிகள் தம் வாழ்வில் ஏற்பட்டுள்ள சவால்களை துணிச்சலாக எதிர்வு கொண்டு எத்துணை சாதனைகளை படைத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். 

எனவே பெண்ணானவள் இரு கூறிய முனை கொண்ட ஓர் ஆயுதமாவாள். அவள் சீர் பெற்று தன்னுடைய அடிப்படை பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி தனக்கென்று நிர்ணயிக்கபட்ட நோக்கத்தை பூர்த்தி செய்து பலம் வாய்ந்த உயர்ந்த குணம் மற்றும் படித்த சமுதாயத்தையும் உறுவாக்குவதில் ஒரு சிறந்த அடிக்கல்லாகவும், வலுவுள்ள தூணாகவும் மாறிவிடுவாள். 

நிச்சயமாக ஒவ்வொரு உயர்ந்த ஆணுக்குப் பின்னாலும் உயர்ந்த பெண் ஒருத்தி இருப்பாள்.

"வழித்தடம்" - All University Muslim Student Association 
M.I.F Hamna
South Eastern University Of Sri Lanka

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.