முழு விபரம் - நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான தகவல்

முழு விபரம் - நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 655 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 32,790 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 503 பேர் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவார்.


$ads={2}

அத்துடன் சிறைச்சாலைகளிலிருந்து 147 பேரும், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 5 பேரும் ஏனைய கொரோனா நோயாளர்கள் ஆவர்.

இதேவேளை 489 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கையும் 23,793 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,845 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 444 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் (03) மரணம் இடம் பெற்றிருப்பதாக நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 152ஆகும்.

01. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண். கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையினால் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் நபர். கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுடனான நிமோனியா நிலையுடன் இதயம் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post