மாலைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் திட்டத்திற்கு முஸ்லிம் எம். பிக்கள் முழு எதிர்ப்பு!

மாலைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் திட்டத்திற்கு முஸ்லிம் எம். பிக்கள் முழு எதிர்ப்பு!


இலங்கை முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை, மாலைதீவில் நல்லடக்கம் செய்யும் திட்டம் , கைவிடப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

இலங்கை முக்கிய வர்த்தக முஸ்லிம் புள்ளிகள், ஜனாஸா எரிப்பு விவகாரத்தை மாலைதீவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.


மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி, இலங்கையர்களின் ஜனாஸாவை தமது நாட்டில் நல்லடக்கம் செய்ய விரும்பியிருந்தார். அதற்குத் தான் சம்மதம் எனவும், இருந்தபோதும் மாலைதீவின் எதிர்கட்சியுடன் பேசி பாராளுமன்றத்தின் சம்மதம் இதற்காக, பெற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


இலங்கை சுகாதாரத் தரப்பும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைதீவில் நல்லடக்கம் செய்ய தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.


$ads={2}


எனினும்  இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்குவதற்கு தமது முழு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


இதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் நல்லடக்கம் செய்யும் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பு விரைவில் உருவாகுமெனவும், குறித்த அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.


மூலம் - ஜப்னா முஸ்லீம்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post