
கொரோனா தொற்றினால் உயிரிழப்பதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் உடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைத்துப் பாதுகாப்பதற்கான மாற்று யோசனையை அவர் நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
$ads={2}
இது பெருந்தொற்று காலம் என்பதால், சமய உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லையெனவும் உயிரோடிருப்பவர்களின் பாதுகாப்பு கருதி கட்டாய எரிப்பு தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் காரணங்களுக்காகவே கொரோனா உடலங்கள் எரிக்கப்படுகின்றன எனும் குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற அதேவேளை இன்றும் ஜனாஸா எரிப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.