
"எமது தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் என கூறிக் கொண்டு இலங்கையர்களுக்கு தொலைத் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கு பணம் வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்தும் சில மோசடிக்காரர்கள் தொடர்பாக எமது தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
$ads={2}
இவர்களை நம்பி எவ்வித பணத் தொகையையும் வழங்க வேண்டாம் என பொதுமக்களை எமது தூதரகம் அறிவுறுத்துகின்றது.
நாட்டுக்குத் திரும்புகின்ற இலங்கையர்கள் விமான டிக்கட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையிலுள்ள அல்லது சவூதியிலுள்ள டிக்கட் விநியோக எயார்லைன் அலுவலகங்களுக்கு நேரடியாகவே பணம் செலுத்த வேண்டும்."