இன்று பிற்பகல் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

இன்று பிற்பகல் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.


வளிமண்டல திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே, நாளைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் மற்றும் கரையோரபிரதேசங்களிலும் விசேடமாக காலை வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதேவேளை, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசுமென்பதுடன், மின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post