
இறக்காமம் - மதீனாபுரம் பள்ளி வாசலின் கண்ணாடிகள் நேற்று (18) இரவு அல்லது இன்று அதிகாலை உடைக்கப்பட்ட சம்பவ புகைப்படங்கள் சமூக வலைகளில் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பில் குறித்த பகுதியின் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட பள்ளிவாயலில் சமையலில் ஈடுபடும் மூவர் (முஸ்லிம்கள்) உணவு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
இதனை அடுத்து அவர்களில் ஒருவர் (சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்) பள்ளிவாயலின் கண்ணாடிகளை உடைத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
இது தொடர்பில் பொலிஸார் தன்னிடம் இவ்வாறு குறிப்பிட்டதுடன் அடுத்து குறிப்பிட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் சேதமடைந்த பகுதிகளை திருத்தி தருவதற்கு கேட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் சம்பந்தப்படவில்லை என்பதையும் சில ஊடகங்களில் மற்றும் சமூக வலைகளில் வெளியாகி உள்ளது போல் இதில் மர்ம நபர்கள், அடையாளம் தெரியாதவர்கள் செய்துவிட்டு தப்பிச் சென்றது எதுவும் பதியப்படவில்லை என போலீசார் மற்றும் பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
- பாருக் ஷிஹான்

