
இறக்காமம் - மதினாபுறம் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது..
இச்சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
மூன்று இனம் தெரியாத மர்ம நபர்களே இவ்வாறு பள்ளிவாசலினுள் உட் புகுந்து அதனுடைய கதவு மற்றும் கண்ணாடி போன்றவற்றினை நாசம் செய்துள்ளதாக அயலவர்கள் கருத்து தெரிவித்தனர்.
$ads={2}
கடை உரிமையாளர் ஒருவர் இச்சம்பவத்தினை பார்வையிட்டுள்ளார். பின்னர் அவர் அவர்களை தடுக்க முற்படும் போது அந்த மர்ம நபர்கள் அவரை அச்சுறுத்தி இக்கொடூர செயலினை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் அறியமுடியவில்லை.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Updated at 5:30pm
Click Here : இறக்காமம் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பான விபரம் வெளியானது!



