நாளை முதல் கண்டி, கெலிஓயா, களுகமுவ பிரதேசம் முடக்கம்?

நாளை முதல் கண்டி, கெலிஓயா, களுகமுவ பிரதேசம் முடக்கம்?

கண்டி, கெலிஓயா களுகமுவ பிரதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. அதனடிப்படையில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கண்டி, கெலிஓயா களுகமுவ பிரதேசத்தில் புதிதாக இனங்காணப்பட்ட் 09 கொரோனா தொற்றாளர்களுடனும் முதலாம் நிலைத் தொடர்பினை பேணிய அனைவருக்கும் நாளை காலை PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 


$ads={2}

 மேற்குறித்த பரிசோதனையின் போது ஒருவருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமிடத்து முழு ஊரினையும் முடக்க நேரிடும் என்று பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்

எனவே வீடுகளில் இருந்து வெளியே செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறு குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்கள் வேண்டப்படுவதோடு, தொழிலுக்கு அல்லது அத்தியவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் முடிந்த அளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேற்படி விடயங்களில் அனைவரும் பொறுப்பாகவும் ஒத்துழைப்பாகவும் நடந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வைத்திய அதிகாரி நஸீம் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post