தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இந்த வார முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ள 6 சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள விடயம் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

இதன் அடிப்படையில், விசேட சுற்றுலா செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயண திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளுக்கு தாம் முன்னதாகவே தயாராக இருந்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post