2020 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது தனது கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
"தி ஹிந்து" பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்தார்.
"எமது கட்சிக்கு களுத்துறை மற்றும் நுவரெலியாவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. கம்பஹாவிற்கு ஒன்று கிடைத்தது. குருணாகலைக்கு இரண்டு கிடைத்தது. எமது நியாயமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. நாம் 30 வேட்பாளர்களை கோரினோம். எனினும் கிடைக்கவில்லை. இல்லையென்றால் நாம் 30 பேர் பாராளுமன்றம் சென்றிருப்போம்."
"எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளோம். எமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளோம். எமக்கு அது கிடைத்தால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை. எனினும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தனியாக போட்டியிட எமது கட்சி முடிவெடுக்கும். இரண்டிற்கும் நாம் தயாராக உள்ளோம்."
இந்நாட்தின் கொரொனாவால் மரணித்த சடலங்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
"கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் தமது உறவினர்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்ய முடியும் என கூறுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் உலக சுகாதார அமைப்புடன் உடன்படுகிறேன்" என்றார்.