கண்டி - திகன பகுதியில் வெடிச்சத்தம்? பீதியில் பொதுமக்கள்!

கண்டி - திகன பகுதியில் வெடிச்சத்தம்? பீதியில் பொதுமக்கள்!


கண்டி - திகன - அம்பாக்கோட்டை பிரதேசத்தில் இன்று (05) மாலை இரண்டு தடவைகள் வெடிச் சத்தம் ஏற்பட்டதால் பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் இன்று அதிகாலையும், காலையிலும் இரண்டு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது .


இதனிடையே, இன்று மாலை சுமார் 6 மணி தொடக்கம் 6.27 வரை இரண்டு வெடிப்புச் சத்தங்கள் ஏற்பட்டதாக அம்பாக்கோட்டை மக்கள் தெரிவித்தனர்.


$ads={2}


அம்பாக்கோட்டையில் உள்ள இராணுவ முகாமில் ஏதேனும் பயிற்சிகள் இடம்பெற்றதால் இப்படி சத்தம் உண்டாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம், இன்று காலை ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களையும் உறுதி செய்ததோடு இன்று மாலை ஏற்பட்ட வெடிப்புச் சத்தத்தினால் அதிர்வலை ஏதும் பதிவாகவில்லை என்றும் உறுதிசெய்தது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post