கொரோனா சிகிச்சை மையத்தில் திருட்டு - நான்கு தொற்றாளர்கள் கைது!

கொரோனா சிகிச்சை மையத்தில் திருட்டு - நான்கு தொற்றாளர்கள் கைது!

வாழைச்சேனையில் உள்ள பூனானி கொரோனா மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா தொற்றாளர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 குறித்த நபர்கள் சிகிச்சை மையத்தில் இருந்து பொருட்களை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.


$ads={2}

 “வாழைச்சேனை பூணானி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற நான்கு கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்ற பின்னர் 12 ஆம் தேதி விடுவிக்கப்படவிருந்தனர்.  இருப்பினும், நான்கு நோயாளிகளும் மையத்தில் இருந்து இலத்திரனியல் மற்றும் பிற உபகரணங்களை திருடியதாக சிகிச்சை மையத்தின் மருத்துவர் தெரிவித்திருந்தார்.  திருட்டு தொடர்பாக தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் வாழைச்சேனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.  அவர்களில் மூன்று பேர் கொழும்பு 02 இல் வசிப்பவர்கள், மற்றவர் மஸ்கெலியாவில் வசிப்பவர்”  என பொலிஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post