வைத்தியர் ஷாஃபி மற்றும் ரிஷாட் பதியுத்தீன் தொடர்பில் வெளியான புதிய சர்ச்சை!

வைத்தியர் ஷாஃபி மற்றும் ரிஷாட் பதியுத்தீன் தொடர்பில் வெளியான புதிய சர்ச்சை!

குருநாகல் மருத்துவர் ஷாஃபி விடுதலை செய்யப்பட்ட அன்று அவ்வேளைஅமைச்சராக பதவி வகித்த ரிசாட் பதியுதீன் காரணம் எதுவுமி;ன்றி என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் என குருநாகல் பொலிஸ் அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்னை தொடர்புகொள்வதற்கான காரணங்கள் இல்லை இதனால் எனக்கு இது குறித்து சந்தேகம் எழுந்தது என மகிந்த திசநாயக்க என்ற அந்த பொலிஸ்அதிகாரி தெரிவித்துள்ளார். 

மருத்துவர் ஷாஃபி பிணையில் விடுதலையான அன்று மாலை ரிசாத்பதியுதீன் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு திசநாயக்க நீங்கள் நலமாகயிருக்கின்றீர்களா தற்போது உங்களிற்கு மகிழ்ச்சியா என கேட்டார் என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


$ads={2}

இந்த தொலைபேசி அழைப்பு குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள்அமைச்சர் உங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினாரா என்ற கேள்விக்கு அமைச்சருக்கு என்னை தனிப்பட்ட ரீதியில் தெரியாது இதனால் அவர் சாட்சியொருவரை தொடர்புகொள்ளவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்..

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post