கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்கு தடை???

கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்கு தடை???

அதிக மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அனைத்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காலத்தில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டங்களை கடைபிடிக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


$ads={2}

அத்தோடு பண்டிகை காலங்களில் கொண்டாட்டங்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அஜித் ரோஹண கூறினார்.

இதற்கிடையில், பண்டிகை காலங்களில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post