பொகவந்தலாவ பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபர் திடீர் மரணம்!

பொகவந்தலாவ பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபர் திடீர் மரணம்!


மத்திய மாகாணம், பொகவந்தலாவ பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ மோரா கீழ்ப் பிரிவைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று (14) காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மரணமானவரின் பேரன் கொழும்பு சீதுவ பகுதியிலிருந்து சமீபத்தில் மோரா தோட்டத்திலுள்ள வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த இளைஞன் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே இவ்வாறு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


உயிரிழந்த நபருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், மரணமடைந்தவரின் சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பதா இல்லையா என தீர்மானிக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post