மொபைல் சாதனங்கள் துண்டிக்கப்படும்! தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

மொபைல் சாதனங்கள் துண்டிக்கப்படும்! தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சிம் மூலம் இயங்கும் அங்கீகரிக்கப்படாத மொபைல் சாதனங்கள் துண்டிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


சிம் மூலம் இயக்கப்படும் TRCSL அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.


குறித்த ஆணைக்குழு வழங்கிய விற்பனையாளர் உரிமம் வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெறுமாறு TRCSL பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

$ads={2}


மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் IMEI ஐ TRCSL தரவுத்தளத்துடன் சரிபார்ப்பதில் அங்கீகரிக்கப்படாத சிம் இயக்கப்பட்ட தொலைதொடர்பு சாதனங்கள் சிம் சேவை வழங்குநரின் மூலம் செயலிழக்கப்படும்  (SIM Lock) என ஆணையம் மேலும் கூறியுள்ளது.


சரியான TRCSL அங்கீகரிக்கப்பட்ட சாதனம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் பயனர்களால் தனிப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று TRCSL மேலும் கூறியது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post