மிருகங்கள் மத்தியில் பரவும் புதிய வகை நோய் தொற்று; மர்மமான முறையில் இறக்கும் மாடுகள்!

மிருகங்கள் மத்தியில் பரவும் புதிய வகை நோய் தொற்று; மர்மமான முறையில் இறக்கும் மாடுகள்!

பொலன்னறுவை தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள மாடுகளுக்கு மர்மான நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் திடீரென 25 மாடுகள் உயிரிழந்தமையினால் வனவிலங்கு பூங்காவில் உள்ள ஏனைய மாடுகளுக்கும் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதேச மக்களிடம் இருந்து கிடைத்த தகவலுக்கமைய அந்த பிரதேசத்தின் வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சொருவிலவில்லவ மற்றும் ஹதபானவில்லுவ பிரதேசத்தில் பல இடங்களில் உயிரிழந்த நிலையில் 25 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

$ads={2}

இந்த கண்கானிப்பு செயற்பாட்டின் பிரதானியாக செயற்பட்ட பொலன்னறுவை வனவிலங்கு உதவி இயக்குனர் தகவல் தருகையில்,

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தகவல் கிடைத்தது. பல இடங்களில் உயிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்ட மாடுகள் மீட்கப்பட்டன. இது தொற்று நோய் ஒன்றின் ஆபத்தாக இருக்கலாம்.

அது தொடர்பில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த நோய் தொற்று மாடு, ஆடுகளுக்கு மாத்திரமின்றி யானைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மேலும் பரவாத வகையில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post