முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாமெனும் கோசம் வலுப்பெற்று வரும் நிலையில் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாத்து வைக்கும் திட்டம்!

முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாமெனும் கோசம் வலுப்பெற்று வரும் நிலையில் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாத்து வைக்கும் திட்டம்!

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும்
முஸ்லிகளின் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாத்து வைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாமெனும் கோசம் வலுப்பெற்று வரும் நிலையிலேயே அதற்கான இறுதி தீர்வு கிடைக்கும் வரை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாக்க குளிரூட்டிய கெண்டைனர்கள் கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு மற்றும் கிழக்கிலும் நிறுவப்பட உள்ளதாக அவர் ஆங்கில இணையம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


$ads={2}


பாதிக்கப்பட்ட உடல்களை மற்ற உடல்களுடன் சவக்கிடங்கில் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்பதால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டதாக டாக்டர் அசெல குணவர்தன தெரிவித்தார்.


இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் வரை உடல்களை கொள்கலன்களில் சேமித்து வைப்பதே இந்த திட்டமாகும் என்றார்.


முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருப்பதால் உடல்களை தகனம் செய்வதை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post