மூடப்பட்ட பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை!

மூடப்பட்ட பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கண்டி நகரில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் சிலவற்றின் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கண்டி நகரில் அமைந்துள்ள 42 பாடசாலைகள் எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.


$ads={2}

கொரோனா அச்ச நிலை காரணமாக, கண்டி நகரில் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கண்டி நகரில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த பாடசாலைகளை இன்று வரை தொடர்ந்தும் மூடுமாறு மத்தியமாகாண ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post