கொரோனா அச்சம் - அடுலுகமை பண்டாரகம மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

கொரோனா அச்சம் - அடுலுகமை பண்டாரகம மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

அடுலுகமை பண்டாரகம என்ற இடத்தில் பெருமளவான பொதுமக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவலை பண்டாரகம மேலதிக சுகாதார அலுவலர் வைத்திய கலாநிதி ஸ்ரீமாலி அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் மற்றும் ஏன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரதேசம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக மாரவ என்ற பிரதேசத்தில் வசிக்கும் 2,800 பேர் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


$ads={2}

அதன் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட 400 பேருக்கு முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் ஏன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இராணுவ பாதுகாப்புடன் அங்கு சென்றிருந்தபோது தம்மால் அழைக்கப்பட்டிருந்த 400 பொதுமக்களிலிருந்து 22 பேர் மாத்திரமே பரிசோதனைகளுக்கு சமூகம் அளித்திருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த 22 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனை பண்டாரகம மேலதிக சுகாதார அலுவலர் வைத்திய கலாநிதி ஶ்ரீமாலி அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post